சட்டவிரோதமாக மான் ஒன்றை வீட்டில் வளர்த்த ஒருவர் கைது

(பைஷல் இஸ்மாயில்)

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்குடாவெளி கிராமத்தில் வீடொன்றில் 5 வயது மதிக்கத்தக்க மான் ஒன்றை எதுவித அனுமதியுமின்றி வளர்த்த நபர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

கரடியனாறு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்று மானை கைப்பற்றி மட்டக்களப்பு வனவிலங்கு அதிகாரிகளிடம் கையளித்துள்ளனர்.

அதனையடுத்து வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் மார்ச் மாதம் 9
ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.