அம்பாறை மாவட்ட இளைஞர் ,யுவதிகளுக்கு நல்லிணக்கப் பயிற்சி பட்டறை

( எம்.என்.எம். அப்ராஸ்)

சமாதானமும் சமூக பணி நிறுவனத்தின் (PCA) அனுசரணையில் இயங்கி வரும் அம்பாறை மாவட்ட இளைஞர் நல்லிணக்க குழுக்களின் உறுப்பினர்களுக்கான ஒரு நாள் நல்லிணக்கப்பயிற்சி பட்டறை பதியத்தலாவையில் நேற்று (22) இடம்பெற்றது .

கல்முனை,கல்முனை வடக்கு ,நாவிதன்வெளி,மஹாஓயா ,பதியத்தலாவ ,
தெஹியத்தக்கண்டி ஆகிய பிரதேச செயலக பிரிவில் உள்ள இளைஞர் நல்லிணக்க குழுக்களின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் .

இளைஞர்கள் மத்தியில் புரிந்துணர்வை ஏற்படுத்துவதன் மூலம் சமூகத்தின் மத்தியில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்பக்கூடிய வாய்ப்புகள் மற்றும் சமுக நீதி ,சமத்துவத்துவ நல்லிணக்க முன்னெடுப்புக்கள் பற்றி கலந்துரையாடப்பட்டதுடன்,மேலும் இவ் நல்லிணக பயிற்ச்சிப் பட்டறையில் சமாதானம் மற்றும் சமூக பணி நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் டி.இராஜந்திரன்,சமாதான சமுக பணி அமைப்பின் நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர்களான கே.டி.ரோகிணி , எச்.எஸ். ஹசனி, டப்ளியு.எம்.சுரேகா,எம்.எல்.ஏ.மாஜீத், பிரதேச இளைஞர் நல்லிணக்க மன்றங்ககளின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.