தாழங்குடா ஸீப்ரா விளையாட்டுக் கழகத்தின் 7வது பிறீமியர் லீக் கிறிக்கெட் சுற்றுப்போட்டி!!

(கல்லடி நிருபர்)

தாழங்குடா ஸீப்ரா விளையாட்டுக் கழகத்தின் 7வது பிறீமியர் லீக் கிறிக்கெட் சுற்றுப்போட்டி நிகழ்வுகள் கழகத் தலைவர் நிரஞ்சன் தலைமையில் 20,21. 02.2022 ஆகிய திகதிகளில் நடைபெற்றது.

உடல் உள ஆரோக்கியத்தை பேணும் நோக்கிலும், கிராமத்தின் இளைஞர்களிடையே ஒற்றுமையை மேம்படுத்தும் விதமாகவும் கிராமத்தில் உள்ள அனைத்து கிறிக்கெட் வீரர்களும் ஒன்றிணைத்து Batti Boys, Z. Lion, Green Guys, Golden Flower, Kennedy என ஐந்து அணிகளாகப் பிரிந்து பலப்பரீட்சை நடத்தினர். இதில் இறுதிச்சுற்றுக்குத் தெரிவான Green Guys மற்றும் Kennedy ஆகிய இரு அணிகளில் Kennedy அணி வெற்றிவாகை சூடிக்கொண்டது.

இடம்பெற்ற இறுதிப் போட்டிகளின் அடிப்படையில் ஆட்ட நாயகனாக கு.புவிப்பிரகாஸ் அவர்களும், சிறந்த துடுப்பாட்ட வீரராக லோ.ஜெகதீஸ் அவர்களும், தொடர் நாயகனாக லோ.ஜெகன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்ததுடன், வெற்றிபெற்றவர்களுக்கான பரிசில்களையும் வழங்கியிருந்தார். அத்தோடு குறித் நிகழ்வில் கிராம உத்தியோகத்தர் திருமதி சுகன்யா அனோஜன்பிரகாஸ் உள்ளிட்ட கிராம தலைவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.