அட்டப்பள்ளம் கடற்கரை பிரதேசத்திற்கு நீராடச் சென்ற இளைஞன் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார் !

வி.ரி.சகாதேவராஜா
நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டப்பள்ளம் கடற்கரை பிரதேசத்திற்கு நீராடச் சென்ற இளைஞன் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார்

இச்சம்பவம்  திங்கட்கிழமை பிற்பகல் 4 மணி அளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
இதன்போது தனது நண்பருடன் கடற்கரைப் பிரதேசத்திற்கு சென்ற குறித்த இளைஞன் மது அருந்திய நிலையில் கடலில் நீராடுவதற்காக சென்றபோது நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரியவருகின்றது
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் ஜெயஸ்ரீறில்  நிலைமைகளை கேட்டறிந்து கொண்டதுடன் காணாமல் போன இளைஞனை தேடும் நடவடிக்கைகளையும் துரிதப்படுத்துமாறு சம்பந்தப்பட்டவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்