கல்முனை இருதயநாதர் ஆலயத்தில் இனங்களுக்கிடையில் சமாதானத்தை வலியுறுத்தி இரத்ததான முகாம்

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

தேசிய சமாதான பேரவையின் அனுசரணையுடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட எகெட் நிறுவனத்தோடு இணைந்து கல்முனை இருதயநாதர் ஆலயம் ஏற்பாடு செய்திருந்த இரத்ததான முகாம் இன்று (20.02.2021) ஆலயத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

கல்முனை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர்.இரா. முரளீஸ்வரனின் வழிகாட்டலுக்கு அமைய இரத்த வங்கி பிரிவின் வைத்திய அதிகாரிகள் தாதி உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டு இரத்த மாதிரிகளை சேகரித்து கொண்டனர்.

இனங்களுக்கிடையில் சமாதானம், அமைதி, ஒற்றுமை ஏற்பட வேண்டும் என்று நோக்கோடு இந்த இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ஆண்கள் – பெண்கள் என கல்முனை வாழ் மக்கள் பலரும் இந்த இரத்ததான முகாமில் கலந்துகொண்டு இரத்தங்களை வழங்கினர்கள்.