தியாவட்டவான் மையவாடியில் சிரமதானப்பணி

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)

கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட தியாவட்டவான் மையவாடி பற்றைக்காடாகக் காட்சியளித்த நிலையில், நேற்று 18.02.2022ம் திகதி காலை 09 மணி முதல் துப்புரவு செய்யும் சிரமதானப்பணி இடம்பெற்றது.

ஏவி கல்குடா டைவர்ஸ் மற்றும் அவசர சேவைப்பிரிவு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த இச்சிரமதானப்பணியில் அதன் அங்கத்தவர்கள், பிரதேச பொது மக்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.