மட்டக்களப்பு பாடுமீன் விளையாட்டுக் கழகத்தின் வாருடாந்த பொதுக் கூட்டம்

(துதி)

மட்டக்களப்பு மாவட்டத்தில் உதைபந்தாட்டத்தில் சிறந்து விளங்கும் முதன்மைக் கழகங்களில் ஒன்றாகத் திகழும் பாடுமீன் பொழுதுபோக்கு விளையாட்டுக் கழகத்தின் 73வது வருடாந்த பொதுக் கூட்டம் மட்டக்களப்பில் இடம்பெற்றது.

கழகத்தின் தலைவர், மாநகரசபை உறுப்பினர் ம.ரூபாகரன் தலைமையில் இடம்பெற்ற இப்பொதுக் கூட்டத்தில் கழகத்தின் கௌரவ உறுப்பினர்களான வைத்திய கலாநிதி கே.ஈ.கருணாகரன், வைத்திய கலாநிதி நவலோஜிதன், செயலாளர் என்.கிசோக்குமார் உள்ளிட்ட கழகத்தின் மூத்த உறுப்பினர்கள், நிருவாக உறுப்பினர்கள் மற்றும் கழக உறுப்பினர்கள், வீரர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

நடப்பாண்டுக்கான புதிய நிருவாகத்தைத் தெரிவு செய்யும் பொருட்டு இடம்பெற்ற இக்கூட்டத்தில் சென்ற ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட செயற்திட்டங்கள், வரவு செலவுகள் உள்ளிட்ட விடயங்கள் ஆராயப்பட்டதுடன், எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ள திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இறுதியில் நடப்பாண்டுக்கான தலைவராக மாநகரசபை உறுப்பினர் ம.ரூபாகரன் அவர்களே மீண்டும் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டதோடு நிருவாகத்திற்கான ஏனைய உறுப்பினர்களும் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.