ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம் அனுப்புவது குறித்து தமிழ்த் தேசிய கட்சிகள் ஆராய்வு!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம் ஒன்றை அனுப்புவதற்காக தமிழ்த் தேசிய கட்சிகள் ஒன்றுகூடி ஆராயவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, யாழ்ப்பாணத்தில் இன்று (புதன்கிழமை) மாலை 4 மணியளவில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

அதேநேரம், ‘ஈழத்தமிழர் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வும் – தேசிய பிராந்திய சர்வதேச நிலவரங்களும்’ என்ற தலைப்பில், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அரசியல் ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோரின் பங்கேற்புடனான கூட்டமொன்றும் இன்று முற்பகல் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.