ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்காலச் செயற்பாடு; மக்களுக்கு தெளிவு படுத்தும் கலந்துரையாடல்

(இ.சுதாகரன்)

ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்காலச் செயற்பாடுகளை மக்களுக்கு தெளிவு படுத்தும் கலந்துரையாடல் களுவாஞ்சிகுடி அமரர் இராமாணிக்கம் கலை அரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை முன்னாள் பிரதி அமைச்சர் கெளரவ சோமசுந்தரம் கணேசமூர்த்தி தலைமையில் நடைபெற்றது

நிகழ்வில் திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ இம்ரான் மகிறூப் மற்றும் முன்னாள் அமைச்சர் புத்திக பத்திரன,ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மத்தும பண்டார மற்றும் சோமசுந்தரம் கணேசமூர்த்தி அவர்களின் செயலாளர் தேச கீர்த்தி க. சிறிக்குமார்,ஜக்கிய மக்கள் சக்தியின் பிரதேச உறுப்பினர்கள் உட்பட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதாரச் சுமையும் அவ்வாறான சூழலிருந்து மக்களை எவ்வாறு எதிர் காலத்தில் பாதுகாப்பது தொடர்பான விளக்கம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.