மாவடிவேம்பு இயற்கைக்குளத்தில் மீன்பிடித்த இளம் குடும்பஸ்தர் நீரில் மூழ்கி பலி

(ஏறாவூர் நிருபர் – நாஸர்)

மட்டக்களப்பு- மாவடிவேம்பு இயற்கைக்குளத்தில் தூண்டில் இட்டு மீன்பிடித்துக் கொண்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று 15.02.2022 இடம்பெற்றுள்ளதாக சந்திவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

மாவடிவேம்பு பிரதேசத்தைச்சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 38 வயதுடைய இளயதம்பி பரமேஸ்வரன் என்பவரே உயிரிழந்தவராவார்.

கூலித்தொழிலாளியான இவர் தனது நண்பருடன் தூண்டில்இட்டு மீன் பிடித்துக்கொணடிருந்தவேளை சேற்றில் புதையுண்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

திடீர் மரண விசாரணையதிகாரி எம்எஸ்எம். நஸிர் சம்பவ இடத்திற்குச்சென்று பார்வையிட்டு நீதிவிசாரணைகளை ஆரம்பித்தார்.

சந்திவெளி பொலிஸ் சார்ஜன்ட் ஈ. சபேசன் (29473) மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் தேசியன் (8173) ஆகியோர் மரணமடைந்தவரது உறவினர்களிடம் வாக்குமூலம் பதிவுசெய்தனர்.

பிசீஅர் மற்றும் பிரேத பரிசோதனைகள் மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையில் நடைபெற்றன.