200 மீற்றர் தூரத்தை 10 நிமிடத்தில் நீந்திக் கடந்த கல்குடா டைவர்ஸ் அணியின் சுழியோடிகள்

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)

200 மீற்றர் கடல் தூரத்தை 10 நிமிடத்தில் நீந்திக் கடந்து பலரது பாராட்டினையும் கல்குடா டைவர்ஸ் அணியின் சுழியோடிகள் பெற்றுக் கொண்டனர்.

கடந்த 11.02.2022ம் திகதி முதல் தொடர்ந்து மூன்று தினங்கள் இடம்பெற்ற “உயிர்காக்க பயில்வோம்” பயிற்சிப்பட்டறையின் இறுதி நாள் பாசிக்குடா கடற்கரையில் இடம்பெற்றது.

இதன் போது நீச்சல் பயிற்சி மற்றும் நீரில் மூழ்குவோரை காப்பற்றல், நீரில் மூழ்கி காணாமல் போவோரை சுழியோடி தேடுதல் எனப்பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன.

இதன் போது, உயிர்காப்புப்பயிற்சியில் பங்கு பற்றியிருந்த 47 பேரில் கல்குடா டைவர்ஸ் அணியின் சுழியோடிகளான முஹம்மத் கபீர் இப்றாஹீம், அப்துல் மஜீத் ஹலீம் ஆகியோர் சுமார் 200 மீற்றர் தூரத்தை 10 நிமிடங்களுக்குள் கடலில் நீந்திக்கடந்து சகலரதும் பாராட்டைப் பெற்றுக் கொண்டனர்.

அத்தோடு, அண்மைக்காலமாக இப்பிரதேசத்தில் இடம்பெறும் நீர் அனர்த்தங்களின் போது குறித்த கல்குடா டைவர்ஸ் அணியினர் களத்தில் நின்று பணியாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.