இணைய வழியில் வேடதாரி 4 அரங்கச் சஞ்சிகை வெளியீட்டு விழா

வேடதாரி 4 அரங்கச் சஞ்சிகை வெளியீட்டு விழா நிகழ்வு மெய்நிகர் இணைய வழியில் 23.01.2022 ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு எழுத்தாளர் வேலணையூர் தாஸ் தலைமையில் இடம்பெறவுள்ளது

இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கிழக்குப் பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி சி.ஜெயசங்கர் சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாணம் தேசியகல்வியியற்கல்லூரி ஓய்வுநிலை முதுநிலை விரிவுரையாளர் க.இ.கமலநாதன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளார்கள்.

வாழ்த்துரையினை மேனாள் கல்விஅமைச்சின் மேலதிக செயலாளர் உடுவை எஸ்.தில்லைநடராசா, எழுத்தாளர் குப்பிளான் ஐ.சண்முகன், நாடகச் செயற்பாட்டாளர் கனடா ப.அ.ஜெயகரன், வெளியீட்டுரையினை எழுத்தாளர் வேல் நந்தன், மதிப்பீட்டுரையினை கிழக்குப் பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் சு.சந்திரகுமார், ஏற்புரையினை வேடதாரி சஞ்சிகை பிரதம ஆசிரியர்கள் எஸ்.ரி.குமரன் எஸ்.ரி.அருள்குமரன், நன்றியுரையினை ஷ.ஹபீசன் ஆகியோர் வழக்கவுள்ளனர் .

குழந்தை ம.சண்முகலிங்கம் சிறப்பு இதழாக வெளிவரும் சஞ்சிகை வெளியீடுடு நிகழ்வுக்கு ஆர்வலர்களை சூம் செயலி இலக்கம் 6473348261கடவுச் சொல் ITM ஊடக இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளனர்