இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுடன் றிஸ்லி முஸ்தபா சந்திப்பு !

( எம். என். எம். அப்ராஸ் )

பத்திக், கைத்தறி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர அவர்களுக்கும் கல்முனை தொகுதி ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தகர் ரிஸ்லி முஸ்தபாவுக்குமிடையிலான சந்திப்பு கொழும்பில் உள்ள அமைச்சில் இன்று (20)மாலை இடம்பெற்றது.

இதன்போது அம்பாறை மாவட்டத்திலுள்ள சிறுகைத்தொழிலில் ஈடுபடுகின்றவர்களின் பிரச்சினைகள் தொடர்பிலும், அவர்களது தொழில் வாய்ப்பினை ஊக்குவிக்கும் வகையிலான வழிமுறைகள் பற்றி
இராஜாங்க அமைச்சரிடம் கலந்தாலோசிக்கப்பட்டதுடன் சில செயற்திட்டங்களும் சமர்ப்பிக்கப்பட்டது.

ஆடை உற்பத்தி, சிறுகைத்தொழில் உட்பட்ட விடயங்களில் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்தவர்களே கூடுதலாக ஈடுபடுவதை இராஜாங்க அமைச்சரிடம் றிஸ்லி முஸ்தபா தெளிவுபடுத்தியதுடன் நேரடியாக அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்து இதுபற்றி அறிந்துகொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

வெகு விரைவில் அம்பாறை மாவட்டத்திற்கு
விஜயம் செய்வதாகவும் தங்களால் சமர்ப்பிக்கப்பட்ட செயற்திட்டங்களுக்கு நடவடிக்கை எடுப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் இதன்போது உறுதியளித்தார்.