ஐக்கிய இராச்சியத்தின் தெற்காசிய இராஜாங்க அமைச்சர் கிழக்கு ஆளுனருடன் சந்திப்பு

(ஹஸ்பர்)

ஐக்கிய இராச்சியத்தின் தெற்காசிய மற்றும் பொதுநலவாய விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் தாரிக் அஹமட் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்துக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று (19) திருகோணமலையிலுள்ள ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.

மூன்று நாட்கள் இலங்கையில் தங்கியிருக்கும் இராஜாங்க அமைச்சர் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோருடன் கலந்துரையாடியுள்ளார்.

கூடுதலாக, ஐக்கிய இராச்சியத்திலிருந்து இலங்கையின் கல்விக்காக, மாணவர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகளின் அளவை அதிகரிப்பது தொடர்பாகவும் ஆளுனர் எடுத்துரைத்தார்,

கிழக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் நடப்பு விவகாரம் உள்ளிட்ட விடயங்களும் பேசப்பட்டன.

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ,
, ஆளுநரின் செயலாளர் எல்.பி.மதநாயக்க . உதவிச் செயலாளர் .தேவேந்திரா, ஆளுநரின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.