திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத்தினால் வாழ்வாதார உதவி வழங்கல்

(ஆர்.சமிரா)

திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கமானது, குச்சவெளிக் கோட்டத்திலுள்ள கட்டுக்குளம் மற்றும் செந்தூர்க் கிராம அலுவலர் பிரிவுகளில் வாழும் பெண்கள் தலைமை தாங்கும் நான்கு குடும்பங்களுக்கு அவரவர் கேட்ட, வாழ்வாதார உதவிகளை இன்று வழங்கியது, அவற்றின் பெறுமதி மூன்று இலட்சம் ரூபா ஆகும்.

திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத் தலைவர் திரு .ச . குகதாசன் அவர்கள் மேற்படி உதவிகளைப் பயனாளிகளிடம் கையளித்தார். மேலும், நீண்ட தூரம் நடந்து பாடசாலைக்குச் செல்லும் முப்பது மாணவருக்குக் காலணிகளும் வழங்கப்பட்டன.