காரைதீவில் ஒருவழிப்பாதை  ஒருமாதகாலத்துள் இருவழிப்பாதையானது!

(காரைதீவநிருபர் வி.ரி.சகாதேவராஜா) காரைதீவு பிரதானவீதி இருவழிப்பாதையாகும். அதனை வீதி அபிவிருத்தி அதிகார சபை கடந்தவருடம்  ஒருவழிப்பாதையாக அமைத்து கார்ப்பட் இட்டுவந்தது.
 இப்போது திடிரென ஒருவழிப்பாதை முறைமை அகற்றப்பட்டு இருவழிப்பாதையாக மீண்டும் மாற்றப்பட்டுள்ளது.

மக்களுக்கான இந்த வீதி இவ்வாறு அடிக்கடி ஏன் இவ்வாறு மாற்றம் செய்யப்படுகின்றது? விலைவாசி உச்சத்தில் ஏறி மக்கள் வாழமுடியாதவாறு திண்டாடிக்கொண்டிருக்கும்வேளையில் மக்களின் வரிப்பணம் இவ்வாறு திட்டமிடப்படாமல் வீணாக செலவழிக்கப்படுவது முறையா? என்பது பற்றி தெளிவில்லாமல் உள்ளது என மக்கள் அங்கலாய்க்கிறார்கள்.