பொங்கலை முன்னிட்டு மெசிடோ நிறுவனம் நிவாரணப்பணி

( வாஸ் கூஞ்ஞ) 

மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் நிதி அனுசரணையில் மன்னார் மெசிடோ நிறுவனத்தின் இணைப்பாளர் யட்சன் பிகிராடோவின் ஏற்பாட்டில் வடமாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட மிகவும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 2000 மீனவ குடும்பங்களுக்கு நிவாரண பணி தற்போது நடைபெற்று வருகின்றது

அதன் ஒரு பகுதியாக 13.01.2022 பொங்கலை முன்னிட்டு மீனவ சங்கம் மற்றும் கிராம சேவகரினால் தெரிவு செய்யப்பட்ட வடமராட்சி கிழக்குப் பகுதியைச் சேர்ந்த செம்பியன்பற்று வடக்கு தனிப் பணை கிராமம் செம்பியன்பற்று வடக்கு மாமுனை கிராமம் இநாகர்கோவில் தெற்கு குடாரப்பு கிராமம் இவத்திராயன் உடுத்துறைஇ போக்கருப்பு முள்ளியான் ஆகிய 200 குடும்பங்களுக்கான நிவாரண பொருட்கள் மெசிடோ நிறுவனத்தினால் மக்களிடம் இன்று கையளிக்கப்பட்டது.

இவ் உலர் உணவு பொதியில் 10 கிலோ கிராம் அரிசி, 5 கிலோ கிராம் கோதுமை மா, 2 கிலோ கிராம் சீனி, அரை கிலோ கிராம் தேயிலை, அரை கிலோ கிராம் பருப்பு ஆகிய பொருட்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.