கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவத்தின் பின்னணி என்ன?; அமைச்சர் சரத் வீரசேகர  

கிரிஸ்தவ தேவாலயம் ஒன்றில் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் பிரதான நபர் ஒருவர் இருப்பதாக பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் விரைவில் கைது செய்யப்படுவார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.