அம்பாரை மாவட்டத்தில் தைத்திருநாள் வழிபாடுகளும் கொண்டாட்டங்களும்

(சுகிர்தகுமார்)

அம்பாரை மாவட்டத்தில் வாழும் இந்துமக்கள் வீடுகளிலும் ஆலயங்களிலும் இயற்கை தெய்வமாம் சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் தைத்திருநாள் வழிபாடுகளும் கொண்டாட்டங்களும் சிறப்பாக இடம்பெற்றது.

தைபிறந்தால் வழி பிறக்கும் எனும்இந்துமக்களின் பெருநம்பிக்கையோடு வீடுகள் தோறும் அழகிய கோலமிடப்பட்டதுடன் கரும்புகள்கொண்டு அலங்கரிக்கப்பட்ட இடத்தில் புதுப்பானையில் உறவுகள் இணைந்து பொங்கலிட்டு வழிபாடுகளில்ஈடுபட்டனர். பின்னர் பொங்கலை சூரியபகவானுக்கு படைத்துநன்றி தெரிவிக்கும் வழிபாடுகளில் கலந்து கொண்டனர்.

இதேநேரம் அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார்ஆலயம் கோளாவில் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திலும் விசேட பொங்கல் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது.பின்னர் சூரியபகவானுக்கு நன்றி தெரிவிக்கும்பூஜைகளும் இடம்பெற்றன.விசேடமாக நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும்நலம் வேண்டிய பிரார்த்தனைகளும் இடம்பெற்றமை சிறப்பம்சமாகும்