அம்பாறை மாவட்டத்தில் எளிமையான முறையில் பொங்கல் கொண்டாட்டம்

(பாறுக் ஷிஹான்)

பொங்கல் தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் அம்பாறை மாவட்டத்தில் எளிமையான முறையில் கொண்டாடி வருவதை காணக்கூடியதாக இருந்தது.

நாட்டில் ஏற்பட்ட கொரோனா அசாதாரண சூழ்நிலை காரணமாக கடந்த காலங்களில் வீடுகளில் இருந்து பொங்கல் தினத்தை கொண்டாடியிருந்த நிலையில் இவ்வருடம் மிகவும் ஆர்வத்துடன் பொருள் கொள்வனவில் ஈடுபட்டிருந்தனர்.

எனினும் தற்பொழுது பொருட்களின் விலையேற்றம் ஏனைய பிற காரணங்களால் பொதுமக்கள் கோவிலுக்கு சென்ற பின்னர் தத்தமது வீடுகள் வர்த்தக நிலையங்களில் சம்பிரதாய பூர்வமாக பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகர் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் இவ்வாறு எளிமையாக பொங்கல் தினத்தை கொண்டாடி வருகின்றனர்.

மேலும் குறித்த பொங்கல் கொண்டாட்டமானது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக விலைவாசிகள் பெரிதும் அதிகரித்துள்ளதாகவும் பொதுமக்கள் கவலை தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.