மன்னாரிலும் பொங்கல் விழா; வீடுகளில் வெள்ளம் பலர் பொங்கவில்லை

( வாஸ் கூஞ்ஞ)

மன்னார் மாவட்டத்தில் தைத் திருநாளாம் தைப்பொங்கல் விழாவானது ஒவ்வொரு தமிழர் வாழும் பகுதிகளில் சிறப்பாக கொண்டாடப்பட்டபோதும் கடந்த காலங்களைப்போல் இம்முறை சிறப்பாக அமையாது காணப்பட்டது.

இந்து கத்தோலிக்க ஆலயங்களில் சூரியனுக்கு பொங்கல் செய்யப்பட்டதுடன் விஷேட வழிபாடுகளும் ஆலயங்களில் இடம்பெற்றன.

கடந்த சில தினங்களுக்கு முன் மன்னாரில் பெய்த மழையின் காரணமாக சில இடங்களில் குறிப்பாக பேசாலை பகுதியில் இந்துக்கள் செறிந்து வாழும் முருகன் கோவிலடி பிரிவில் மழை வெள்ளம் இன்னும் வற்றாத நிலையில் இப்பகுதியிலுள்ள பல வீடுகள் தொடர்ந்து வெள்ளக்காடாகவே காணப்பட்டு வருகின்றது.

இதனால் இப் பகுதியிலுள்ள மக்கள் பலர் வழமைபோன்று தங்கள் வீடுகளில் பொங்கலை செய்ய முடியாது இருந்ததாகவும் தெரிவித்தனர்.