புத்தாக்க அரங்க இயக்கம் நடத்தும் மெய்நிகர் இணையவழி பன்னாட்டு அரங்க கதையாடல்

புத்தாக்க அரங்க இயக்கம் நடத்தும் மெய்நிகர் இணையவழி பன்னாட்டு அரங்க கதையாடல் தொடர் 12 நிகழ்வு தை மாதம் 16,17,18,19,20 ஆகிய திகதிகளில் இரவு 7 மணிக்கு புத்தாக்க அரங்க இயக்கத்தின் பணிப்பாளர் எஸ்.ரி.குமரன் தலைமையில் இடம் பெறவுள்ளது.

இந் நிகழ்வில் 16.1.2022 ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணப்பல்கலைக்கழக சிரேஸ்ர விரிவுரையாளர் கலாநிதி க..ஸ்ரீகணேசன் அரங்கச் செயற்பாடுகளின் ஊடாக மொழிக்கற்பித்தல் 17.1..2022 திங்கட்கிழமை வடமாகாண கல்வித்திணைக்கள ஓய்வுநிலை அழகில் துறை உதவிக்கல்விப்பணிப்பாளர் திருமதி மதிவாணி விக்னராஜா நாட்டிய நாடகம் வடிவ உள்ளடக்கமும் வளர்ச்சிப்போக்கும் 18.01.2022 செவ்வாய்க்கிழமை கிழக்குப்பல்கலைக்கழக உதவி விரிவுரையாளர் இரா.சுலக்சனா ஈழத்து அரங்கச் சூழலில் சிறுவர் கூத்தரங்க முன்னெடுப்புக்கள் 19.01.202 புதன்கிழமை பேராசிரியர்.

இளங்கோ(இந்தியா) மரபு அரங்கு : புரோசீனியம் அரங்கு 20.01.2022 வியாழக்கிழமை கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் த.விவேகானந்தராசா நிகழ்த்துப் பண்பாடும் பண்பாட்டு நிகழ்த்துதலும் சில அவதாணிப்புக்கள்
ஆகிய விடயங்களில் கதையாடவுள்ளார் .

நிறைவுரையினை புத்தாக்க அரங்க இயக்கத்தின் நிர்வாகப் பணிப்பாளர் எஸ்.ரி.அருள்குமரன் வழங்கவுள்ளார்கள்.

இவ் இணையவழி அரங்க கதையாடல் நிகழ்வில் ஆர்வமுடையவர்களை சூம் செயலி இலக்கம் 647334 8261கடவுச் சொல் ஐகூM ஊடாக இணைந்து கொள்ளுமாறு புத்தாக்க அரங்க இயக்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.