கல்முனை நகர லயன்ஸ் கழகத்தினால் உலர் உணவுப் பொதி

மழை வெள்ளம் காரணமாகப் பாதிக்கப்பட்ட கல்முனை கல்வி வலயத்திலுள்ள அதி கஷ்ட பிரதேச பாடசாலையான கமு/கமு/ துரைவந்தியமேடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கு கல்முனை நகர லயன்ஸ் கழகத் தலைவரான தொழிலதிபர் என். சிவராசா மற்றும் அவரது பாரியார் திருமதி சுகந்தி சிவராசா ஆகியோர் உலர் உணவுப் பொதி, அப்பியாசக் கொப்பிகளை 13.01. 2022 அன்பளிப்புச் செய்தனர்.

இந் நிகழ்வில் கல்முனை லயன்ஸ் கழக உறுப்பினர்களான எஸ். பொன்னம்பலம். க.அரசரெத்தினம் த, சத்தியகீர்த்தி மற்றும் பாடசாலை அதிபர் செ.பேரின்பராசா ஆகியோர் உள்ளதையும் படத்தில் காண்க.

படம். துறைநீலாவணை நிருபர்