பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனினால் பாடசாலைகளுக்கு உதவி

(குகதர்சன்)

2021ம் ஆண்டு பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் நிதி ஒதுக்கீட்டில் பாடசாலைகளுக்கு பொருட்கள் கையளிக்கப்பட்டு வருகின்றது.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலைக்கு அலுவலக உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு பாடசாலையில் இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் ஏ.எம்.எம்.தாஹிர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், பாடசாலை பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் 2021ஆம் ஆண்டுக்கான வருடாந்த பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து பாடசாலை நிருவாகத்தின் கோரிக்கைக்கு அமைவாக அலுவலக தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

பாடசாலை சுற்றுமதில் அமைப்பதற்கு நிதி உதவியை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதுடன், பாடசாலை முன்பாக உள்ள வீதிகளில் வடிகாண்களை அமைக்க வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுப்பதாகவும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.