பொங்கல் தினத்தினை முன்னிட்டு பொங்கல் பொருட்கள் வழங்கி வைப்பு

(க.ருத்திரன்)

லவன் உதவும் கரங்கள் நற்பணி மன்றத்தினால் தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் தினத்தினை முன்னிட்டு பொங்கல் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

போரதீவு பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ராணமடு கிராமசேவகர் பிரிவின் எல்லைக் கிராமமான 25 ஆம் கொளனியில் வறுமை நிலையில் வாழும் மக்களுக்கு இவ் மனிதநேய உதவி வழங்கி வைக்க்பட்டது.கிராமசேவகர் சோ.குகதாஸன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வெல்லாவெளி பிரதேச செயலாளர் ஆர்.இராகுலநாயகி அவர்களின் அனுமதியுடன் நற்பணி மன்றத் தலைவர் குருசுமுத்து வி லவக்குமார் கலந்து கொண்டு பொங்கல் பொருட்களை வழங்கி வைத்தார்.

குறித்த கிராமமானது மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமமாகும்.குடிநீர் வசதி, இன்றியும்,வீதிகள் சோதமடைந்து காணப்படவதுடன்,காட்டு யானைகளின் தாக்குதல் பொன் பல்வேறு இன்னல்களுக்குள்ளாகி வாழ்ந்து வருகின்றனர்.