டச்பார் புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா நாளை கொடியோற்றத்துடன் ஆரம்பம்

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) 

மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் கல்லடி – டச்பார் புனித அந்தோனியார் ஆலயத்தின் 42 வது வருடாந்த திருவிழா நாளை (14) வெள்ளிக்கிழமை மாலை பங்குத்தந்தை அருட்பணி லோரன்ஸ் லோகநாதன் அடிகளார் தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

அதனைத் தொடர்ந்து 15.01.2022 சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு புனித அந்தோனியாரின் திருச்சுரூப பவனி ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி கல்லடி – டச்பார் பிரதான வீதிகள் ஊடாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்ததும், கூட்டெருக்கியக்கத் திரு அவையில் ஆவியானவரின் செயற்பாடு எனும் சிந்தனைக்கு அமைய நற்கருணை வழிபாடுகள் நடைபெறவுள்ளது.

நவநாட் காலங்களில் அருட்தந்தையர்களான அருட்பணி ஜோட்டன் ஜோன்சன், அருட்பணி ஏ.ஏ.நவரெட்ணம் அடிகளார் ஆகியோரது சிறப்பு அருளுரைகளுடன் திருப்பலிகள் ஒப்புக் கொடுக்கப்படவுள்ளன.

திருவிழா திருப்பலியானது 16.01.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணிக்கு அருட்தந்தை அனிஸ்டன் மொறாயஸ் (இயேசு சபைத்துறவி) அடிகளார் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.

நவ நாட்காலங்களில் புனிதரின் பரிந்துரையால் இறையருள் பெற்றிட அந்தோனியாரின் பக்தர்களை சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி வழிபாடுகளில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றனர் ஆலய பங்கு தந்தையுடன் இணைந்த ஆலய பரிபாலன சபையினர்.