கந்தளாய் பகுதியில் வீடொன்றுக்கு முன்னால் திட்டிரெண்டு மண்சரிவு

(எப்.முபாரக்)

திருகோணமலை கந்தளாய் ஜெயந்த மாவத்தையில் வீட்டுக்கு முன்னால் நேற்று (12) மாலை திடிரென மண் சரிவு ஏற்பட்டதால் இரண்டு குடும்பம் வீட்டை விட்டு வெளியேறியதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இச் சம்பவம் ஜயந்த மாவத்தை, இலக்கம் 73/5 இல் உள்ள வீட்டின் முன்பாக இடம்பெற்றது.

மேலும் தெரியவருவதாவது:

வீட்டு உரிமையாளர் அனோமா மல் காந்தி தெரிவிக்கையில் நாங்கள் வீட்டுக்குள் இருந்த போது திடிரெண்டு சத்தத்துடன் ஒரு பெரிய குழியில் தண்ணீர் இருந்தது மண் சரிந்து பெரிதாகி 6 அடி தாழ்வும் மேலும் அதைச் சுற்றி சுமார் பன்னிரண்டு அடி அகலமும் வெடிப்பு ஏற்பட்டது.

நாங்கள் வழங்கிய தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் மற்றும் புவியியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் பொறியியலாளர் சமிந்தி விஜேரத்ன சம்பவ இடத்திற்கு விஜயம் செய்ததுடன், சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.