திருப்பெருந்துறை ஶ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலய பொதுக்கூட்டம்

திருப்பெருந்துறை ஶ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலயத்தின் பொதுக்கூட்டமானது எதிர்வரும் 16.01.2022 அன்று காலை 10.00 மணிக்கு ஆலய முன்றலில் இடம்பெறவுள்ளதாக ஆலயத்தின் நிருவாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இப் பொதுக் கூட்டத்தில், சம்மாந்துறையிலிருந்து 1990 ஆம் ஆண்டு இடம்பெற்ற வன்செயல்களினால் இடம்பெயர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் வசித்து வரும் எமது சமூக மக்கள் அனைவரும் தவறாது சமுகமளிக்குமாறு ஆலய நிர்வாகம் கேட்டுள்ளது.