திருகோணமலையில் சக்திப்பொங்கல் சிறப்பாக முன்னெடுப்பு!

(ஆர். சமிரா )

சுவிற்சர்லாந்து பேர்ன் மாவட்டம் மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர்பீடம் கல்வி சமூகநலம் பண்பாடு அறப்பணி மையத்தினால் திருகோணமலையில் சக்திப்பொங்கல் நிகழ்வு நேற்றையதினம் மாலை 4.00 மணிக்கு (12.01.2022) சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வு அறப்பணி மையத்தின் திருகோணமலை மாவட்ட பொறுப்பாளர் ஆசிரியர் சக்தி திருச்செந்தூரன் தலைமையில் இடம்பெற்றது.

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் கோடீஸ்வரநாதன் சத்தியப்பிரியா பிரதம அதிதியாக கலந்து பொங்கல் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

இதன்போது, திருகோணமலை பட்டினமும் சூழலும் உதவி பிரதேச செயலாளர் கோடீஸ்வரநாதன் சத்தியப்பிரியா மற்றும் சிரேஸ்ட ஊடகவியலாளர் அரசரெத்தினம் அச்சுதன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

மிகவும் வறிய 50 குடும்பங்களிற்கான இரண்டாயிரம் பெறுமதியான பொங்கல் பொதிகள்
அறப்பணி மையத்தின் நிறுவுனர் சக்தி சுவிஸ் சுரேஷ் சகோதரரின் ஏற்பாட்டில் லண்டன் மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சமூகநலம் பண்பாடு ஈஸ்ராம் வார வழிபாட்டு மன்றத்தின் நிதி அனுசரணையில் வழங்கி வைக்கப்பட்டன.

இதன்போது, திருகோணமலை மாவட்டத்தின் செல்வநாயகபுரம், உதயபுரி, ஆனந்தபுரி, அலஸ்தோட்டம், இலுப்பங்குளம், சல்லி, சாம்பல்தீவு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மிகவும் வறுமைக்கோட்டிற்குட்பட்ட 50 குடும்பங்களுக்கு சுமார் ஒரு லட்சம் பெறுமதியான பொங்கல் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டிருந்தன.

அறப்பணி மையத்தின் உதயபுரி பிரதேசத்திலுள்ள தொண்டர்களிற்கு உலருணவு பொதிகள், பொங்கல் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.