காணாமல் போன 15 சிறுமியின் தாய்க்கு தொலைபேசியூடாக அதிர்ச்சி தகவல்.

 

மஹரகம பகுதியில் இருந்து கடந்த 7 ஆம் திகதி காணாமல் போன 15 வயது சிறுமி வீடு திரும்பியுள்ளதாக சிறுமியின் தாயார் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

மஹரகம, நாவின்ன பிரதேசத்தைச் சேர்ந்த நேஹா கௌமதி ஹேரத் என்ற சிறுமி காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், மஹரகம பொலிஸ் விசேட குழுவொன்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

சிறுமியின் படத்தை நேற்று ஊடகங்களுக்கு வெளியிட்ட பொலிஸார், அவரைக் கண்டுபிடிக்க பொது மக்களின் உதவியை நாடினர்.

சிறுமியின் தாயார் மஹரகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, சம்பவம் தொடர்பில் ஊடகங்களில் செய்தி வெளியாகியதையடுத்து தனது மகள் தனக்கு அழைப்பு விடுத்ததாகவும் வீடு திரும்பியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.