விதியை மீறி செயற்படும் கிழக்கு பண்பாட்டு திணைக்களம்

கிழக்கு மாகாண பண்பாட்டு திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட 2021ம் ஆண்டிற்கான விருது வழங்கல் பட்டியலில், விருதிற்காக கோரப்பட்ட விதியை மீறி தெரிவு இடம்பெற்றுள்ளது.

சிறந்த இலக்கியங்களுக்கான விருது வழங்கும் பட்டியலிலையே திணைக்களம் விதியை மீறி செயற்பட்டுள்ளதாக இலக்கியவாதிகள் தெரிவிக்கின்றனர்.

2020ம் ஆண்டில் வெளியிடப்பட்ட நூல்களுக்கே 2021ம் ஆண்டில் விருது வழங்கப்படும் என விண்ணப்ப அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் 2021ம் ஆண்டு கிழக்கு மாகாணத்தினால் வெளியிடப்பட்ட நூல் ஒன்றிற்கு சிறந்த நூலுக்கான விருது வழங்கப்பட்டுள்ளமை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதனை எவ்வகையில் தெரிவு செய்தனர், இதற்காக செயற்பட்ட நடுவர் குழுவினர் விதியை ஏன் கவனத்தில் கொள்ளவில்லை? எனவும் கலைஞர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மேலும் விருதிற்கான பெயர்விபரங்கள் கடந்த ஆண்டின் இறுதி நாளுக்கு முதல் நாளே, திணைக்கள பணிப்பாளரின் முகநூலில் வெளியிடப்பட்டுருந்தமை எடுத்துக்காட்டத்தக்கது.