மன்னார் மாவட்டம் அபிவிருத்தி நோக்கி முன்னேற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட வேண்டும்; ஆயர் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை

( வாஸ் கூஞ்ஞ)

யுத்தத்தில் பாதிப்டைந்திருந்த மன்னார் மாவட்டம் தொடர்ந்து அபிவிருத்தி காணாது வைத்தியத்துறையிலும் கல்வித் துறையிலும் பின்தங்கியே காணப்படுகின்றது என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை எதிர் கட்சி தலைவர் சஜீத் பிரேமதாசவின் சந்திப்பின்போது இவ்வாறு தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சத்தி கட்சியின் தலைவரும் எதிர் கட்சி தலைவருமான சஜீத் பிரேமதாச ஒரு வாரமாக கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளுக்கு மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் பாடசாலைகள் வைத்தியசாலைகள் ஆகியவற்றுக்கு மேற்கொண்டு வரும் உதவி திட்டங்களுடன் மற்றும் பொது மக்கள் சந்திப்பு இப் பகுதியில் மறைமாவட்ட ஆயர்களையும் மரியாதையின் நிமித்தம் சந்திப்புக்களையும் மேற்கொண்டு ஆசீரையும் பெற்று வருகின்றார்.

அந்த வகையில் சஜீத் பிரேமதாச மன்னாருக்கு வருகை தந்திருந்தபொழுது மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு லயனல் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகையையும் மரியாதையின் நிமித்தம் சந்தித்து ஆசீரை பெற்றதுடன் ஒரு சில நிமிடங்கள் உரையாடலிலும் ஈடுபட்டார்.

அந்நேரம் தற்பொழுது உள்ள நிலையில் தான் எதிர்கட்சியாக இருந்தபொழுதும் கல்விக்கும் சுகாதாரத்துக்கும் முக்கியத்துவம் வழங்கி வடக்கு கிழக்கு பகுதியில் தாங்கள் இதற்கான முக்கியத்தவம் வழங்கி இதற்கான உதவிகளையும் செய்து வருவதாக சஜீத் பிரேமதாச ஆயருடனான உரையாடலில் இவ்வாறு தெரிவித்தார்.

ஆயரும் அவரிடம் கருத்து தெரிவிக்கையில் யுத்தத்தில் மிகவும் பாதிப்பு அடைந்திருந்த மன்னார் மாவட்டம் அபிவிருத்தியில் மிகவும் பின்தங்கி காணப்படுவதுடன் வைத்தியசாலைகளில் நிலவும் குறைபாடுகளை சுட்டிக்காட்டியதுடன் மன்னாரில் ஏனைய மாவட்டங்களைப் போன்று தனியார் மருத்தவ மனையொன்றும் இல்லையென தெரிவித்ததுடன்

இவற்றை கவனத்தில் கொண்டு தாங்கள் தனியார் மருத்துவ மனை ஒன்றை இங்கு உருவாக்கும் நோக்குடன் செயல்பட்டுள்ளதாகவும் ஆயர் அவர்கள் சஜீத் பிரேமதாச அவர்களுக்கு தெரிவித்தார்.

அத்துடன் ஆசிரியர் பற்றாக்குறையானது முக்கிய பாடங்களுக்கு குறிப்பாக ஆங்கில ஆசிரியர்கள் இல்லாத குறையையும் அவரின் கவனத்துக்கு கொண்டு வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இவர்களின் சந்திப்பின்போது பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜங்க அமைச்சருமான புத்திக பத்திரன மற்றும் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் பி.கிறிஸ்துநாயகம் அடிகளார் ஆகியோரும் உடனிருந்தனர்.