லவன் உதவும் கரங்கள் நற்பணி மன்றத்தினால் பல்வேறு உதவிகள்

(க.ருத்திரன்)

லவன் உதவும் கரங்கள் நற்பணி மன்றத்தினால் தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் தினத்தினை முன்னிட்டு பொங்கல் பொருட்கள் மற்றும் தென்னம் கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.

நற்பணி மன்றத் தலைவர் குருசுமுத்து வி.லவக்குமார் தலைமையில் நாகவத்தை கிரானில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு சிவில் செயற்பாட்டாளர்கள் ஒன்றியத் தலைவர் ச.சிவயோகநாதன் அதிதியாக கலந்து கொண்டார்.

களுதாவளை. ஏறாவூர்,செங்கலடி, மயிலவட்டவான்,சித்தாண்டி மற்றும் கிரான் போன்ற கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு இவ் மனிதநேய உதவி வழங்க்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழ்வாதரம் பாதிக்கபட்டு வறுமையில் வாழும் மக்களுக்கு தான்னால் இயன்ற மனித நேய உதவியினை வழங்குவதற்கு தயாராகவுள்ளதாக நற்பணி மன்றத் தலைவர் தமது உரையின்போது தெரிவித்தார்.