குச்சவெளி பிரதேச சபை தவிசாளரினால் ஆலோசகராக நியமனம்

(எப்.முபாரக்) 

பிரதேச சபையின் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.முபாறக் அவர்களினால் தனது ஆலோசகராக குச்சவெளி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.ஐ.ஆஷிக் முகமட் அவர்கள் நியமிக்கப்பட்டு அவருக்கான நியமன கடிதம் இன்று(12) சபையின் தலைமையகத்தில் வைத்து தவிசாளரினால் வழங்கி வைக்கப்பட்டது.

அத்துடன் பிரதேச சபையின் ஆயுட்காலம் மேலும் ஓராண்டுக்கு நீடிக்கப்பட்டு இருப்பதால் சபையின் எதிர்கால நடவடிக்கை சம்மந்தமாக ஆலோசனை வழங்குவதற்கும் மற்றும் அதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்வதற்கு வசதியாகவும் இந்நியமனம் அமையப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.