கல்முனை அல்-ஹாதி அரபுக் கல்லூரிக்கு புதிய மாணவர்களுக்கான விண்ணப்பம் கோரல்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

கல்முனை டவுன் ஜும்ஆப் பள்ளிவாசலில் இயங்கிவரும் அல்-ஹாதி இஸ்லாமிய அரபுக் கல்லூரியில் இவ்வருடமும் ஹிப்ழு மற்றும் கிதாபு பிரிவிற்காக மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

நேர்முகப் பரீட்சை எதிர்வரும் 16 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு மத்ரஸா வளாகத்தில் நடைபெறும்.

ஹிப்ழு மாணவர்களுக்கு புனித அல்-குர்ஆனை கிர்தான் முறையில் பயிற்றுவிக்கப்பட்டு, தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிகளுடன் பாடசாலைக் கல்வியும் போதிக்கப்படும்.

கிதாபு மாணவர்களுக்கு மார்க்கக் கல்வியை ஆழமாக போதிப்பதோடு, அரபு உருது தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளை சரளமாகப் பேச மொழி வளம் வழங்கப்படுவதுடன் ஜீ.சீ.ஈ.சாதாரண தரப் பரீட்சைக்கும் தோற்றுவிக்கப்படுவர். பட்டம் பெற்று வெளியேற முன் மார்க்கத்திற்கு உட்பட்ட தொழிற் பயிற்சியும் வழங்கப்படும்.

இதன் தகைமைகளாக, ஹிப்ழு பிரிவில் பயில, 11 வயது பூர்த்தியடைந்திருத்தல் மற்றும் கிதாபு பிரிவில் பயில 14 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். அத்தோடு, ஜி.சீ.ஈ.சாதாரண தரப் பரீட்சையைப் பூர்த்தி செய்தோருக்கு முன்னுரிமை வழங்கப்படும் மற்றும் இருபிரிவின் பொதுவான தலைமைகளாக,
அல்-குர்ஆனை நன்கு அழகுற சரளமாக ஓதத் தெரிந்திருத்தல், பூரண உடல் ஆரோக்கியம், நன்னடத்தை, நல்ல ஒழுக்கம் மற்றும் மனன சக்தி உடையவராக இருத்தல், வேறு எந்த முழு நேர மத்ரஸாவிலும் ஓதாதவராக இருத்தல் வேண்டும்.

மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ள உப – அதிபர் அஷ்ஷெய்க் மௌலவி எம்.எச்.எம். இர்பாத் (றஷாதி) 0776538536/0758982896 தொடர்பு கொள்ளவும்.