மட்டக்களப்பு மாவட்ட அரச சேவைகைள தகவல் தொழிநுட்பத்துடன் விணைத்திறனாக வழங்க அரசாங்க அதிபர் கருணாகரன் நடவடிக்கை

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)

மட்டக்களப்ப மாவட்டத்தில் வழங்கப்படும் அரச சேவைகளை தகவல் தொழினுட்ப வசதிகளுடன் வினைத்திறனாக மக்களுக்கு வழங்கு வதற்கு அரசாங்க அதிபர் கே. கருணாகரன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதன் முதற்கட்டமாக மாவட்ட செயலகத்திலும், பிரதேச செயலகங்களிலும் வழங்கப்படும் அரச சேவைகளை விரைவு படுத்தி வினைத்திறனுடன் வழங்குவதற்காக புதிய செயலிகளை உருவாக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக மட்டக்களப்பு மாவட்ட செயலக தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப பிரிவு உத்தியோகத்தர்களுக்கு விசேட பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் அடுத்த கட்டமாக பிரதேச செயலக மற்றும் ஏனைய திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு இவ்விசேட பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

இதனடிப்படையில் மைக்ரோ சொப்ட் பயிற்சியாளர்களின் ஆசிய பசுபிக் பிராந்திய தலைவர் எம். விக்னராஜின் மேற்பார்வையில் இடம்பெற்ற நேவறழசம யனெ ளுலளவநஅள யுனஅinளைவசயவழைn பயிற்சியினை பூர்த்தி செய்த மாவட்ட தகவல் தொழினுட்ப பிரிவு உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ்களை அரசாங்க அதிபர் கே. கருணாகரன் நேற்று (11) மாவட்ட செயலகத்தில் வைத்து வழங்கிவைத்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட செயலக தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப உத்தியோகர்தர் திருமதி. லக்~pகா கதீ~ன், iகெ;ரோ சொப்ட் நிறுவன அங்கீகரிக்கப்பட்ட பயிற்சியாளர் எம்.எச்.எம். முர்சித் ஆகியோர் கலந்துகொண்டமை கறிப்பிடத்தக்கது.