அனர்த்தங்களால் பாதிப்படைந்தவர்களுக்கு கொடுப்பனவு

( தாரிக் ஹஸன்)

கடந்த வருடம் ஏற்பட்ட கடும் காற்று மற்றும் மின்னல் தாக்கம் போன்ற பல அனர்த்தங்களால் வீடு, வீட்டு உபகரணப்பொருட்கள் பாதிப்படைந்த காரைதீவு-01, காரைதீவு-06, காரைதீவு-11 மற்றும் மாவடிப்பள்ளி கிழக்கு ஆகிய பிரிவுகளினை சேர்ந்த 13 பயனாளிகளுக்கான முதலாம் கட்ட கொடுப்பனவுக்கான 50,000/- பெறுமதியான காசோலைகள், இரண்டாம் கட்ட கொடுப்பனவுக்கான 119,050/- பெறுமதியான காசோலைகள் பிரதேச செயலாளர் திரு.சிவஞானம் ஜெகராஜன் அவர்களினால்  2022.01.11ம் திகதி வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் பிரிவுகளுக்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.