அங்கஜன் எம்.பியின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் உதவித்திட்டங்கள்

(த.சுபேசன்)

தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பொது அமைப்புக்களுக்கு பாராளுமன்ற உறுப்பினரும்,யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத்தலைவருமான அங்கஜன் இராமநாதனின் 2021ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து பல்வேறு உதவித்திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

11/01/2022 செவ்வாய்க்கிழமை தென்மராட்சி பிரதேச செயலகத்தில் பிரதேச செயலர் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜனின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு பொது அமைப்புக்களுக்கான உதவிப் பொருட்களை வழங்கி வைத்திருந்தனர்.

குறித்த தினத்தில் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் இருந்து சாவகச்சேரி நகர் தென்னகத்தாரகை விளையாட்டுக் கழகத்திற்கு சீருடை,ஜே/295 கிராம அலுவலர் பிரிவில் ஸ்ரீமுருகன் சனசமூக நிலையத்திற்கு கதிரைகள்,கைதடி வடக்கு சனசமூக நிலையத்திற்கு கதிரைகள்,ஜே/298 ஸ்ரீமுருகன் சனசமூக நிலையத்திற்கு கதிரைகள் ஆகியன வழங்கி வைக்கப்பட்டன.

அங்கஜன் எம்.பியின் 2021ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் தென்மராட்சி பிரதேசத்திற்கு 14இலட்சத்து 37,500ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.