சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியின் உள்ளக வீதி திறந்து வைப்பு !

(நூருல் ஹுதா உமர்)

சம்மாந்துறை முஸ்லிம் முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) யில் காணப்பட்ட உள்ளக வீதிகள் யாவும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சி. பைசால் காஸிமின் முயற்சியில் காபட் வீதிகளாக புனரமைக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை (11) பாடசாலையின் பிரதி அதிபர் ஏ.எல்.எம். உவைஸ் (நளீமி) தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வுக்கு பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இவ் வீதியினை திறந்து வைத்தார். மேலும் இந்நிகழ்வில் வைத்து பாடசாலை மாணவர்களின் தேவை கருதி போட்டோ கொப்பி இயந்திரமும் வழங்கி வைக்கப்பட்டது.

பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பாடசாலை பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் அவர்களை பாராட்டி கெளரவித்ததுடன் நினைவுச்சின்னமும் வழங்கி வைத்தனர்.