சாய்ந்தமருதில் மத்திய வங்கியின் விழிப்புணர்வு கருத்தரங்கு

( றம்ஸீன் முஹம்மட்)

தற்போது இடம்பெற்று வரும் போலி வங்கிகள்,பிரமிட் முறை மோசடி, கிரடிட் கார்ட் மோசடிகள் சம்பந்தமாக விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்று 11.01.2022 செவ்வாய்க்கிழமை சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது
.நாட்டில் தற்போது மோசடிகள் தொடர்ந்தும் அதிகரித்த நிலையில் காணப்படுகின்றது. இவ்வாறான மோசடிகள் எதிர்காலத்தில் இடம்பெறாமல் இருக்க இந்த ஏமாற்று பேர்வழிகளிடம் இருந்து பாதுகாப்பு பெற இந்த தகவல்களை பொது மக்களுக்கு கிடைக்கும் வண்ணம் செயற்படுத்த வேண்டியுள்ளது.

ஒரு நிறுவனத்தின் பரிசில் கிடைத்திருப்பதாக அழைப்புகள் வந்தால் குறித்த நிறுவனத்திடமே தேடிச்சென்று விசாரியுங்கள் குறித்த நிறுவனங்களின் உத்தியோகபூர்வ தொலைபேசி அழைப்புகள் இணையத்தளத்தில் பெறமுடியும் மட்டுமின்றி பிராந்திய மற்றும் உப அலுவலகங்களுக்குச் சென்று உறுதிப்படுத்திக் கொள்ளவும் முடியும் .

மேலும் தொழில் பெற்றுத்தருவதாக கூறி பண மோசடி செய்தல்
வெளிநாட்டில் இருந்து பரிசுப்பொதி வந்திருப்பதாக கூறி அதற்கு முற்பணம் பெற்றுக்கொண்டு வரவழைக்கப்பட்ட பார்சலுக்குள் ஒன்றுமெ இருக்காது .குறித்த பார்சல் வெற்று பெட்டியாகவே இருக்கும்.

பரிசு ஒன்று கிடைத்திருப்பதாக ஈமெயில் அல்லது எஸ்எம்எஸ் SMS மூலம் ஏமாற்றுதல் துறைமுகம் மற்றும் விமான நிலையத்தில் தொழில் பெற குறிப்பிட்ட பணத்தை பதிவு செய்யுமாறு கூறி மோசடி செய்தல் அரசின் மூலமாக வீடமைப்பு மற்றும் ஏனைய தொழில் உதவிகள் கிடைப்பதாக கூறி முன்பணம் பெற்று மோசடி செய்தல் அவசர அழைப்புக்காக தொலைபேசியை வாங்கி குறித்த நேரத்தில் சில கட்டணம் அறவிடும் சேவைகளை செயற்படுத்தல் அல்லது குறித்த நிறுவனத்தினால் உங்கள் மொபைலுக்கு என்ன ஓபர் இருக்கிறது என பார்ப்போம் என கூறி குறித்த நேரத்தில் மாத வாடகை சேவைகளை செயற்படுத்தல் ,இணையதள ஒன்லைன் விற்பனைகளில் மோசடி செய்தல் ( முற் பணம் செலுத்துமாறு கூறி ஏமாற்றுதல்)
!கனடா ,அவுஸ்திரேலியா, லண்டன் அனுப்புவதாக கூறி பண மோசடி செய்தல்
பாவித்த கணனி,மொபைல் என திருடப்பட்ட பொருட்களை விற்பனை செய்தல்
பிரபல்யமான நபர்களை கூறி அவர்களின் மகன் அல்லது உறவினர் என கூறி ஏமாற்று வேலைகள் செய்தல் போலியான இணையதள லிங்க் மூலம் டெபிட் கிரெடிட் கார்டு மோசடிகள் இடம் பெறல் அதிக லாபம் தருவதாக கூறி மத்திய வங்கியில் பதிவு செய்யப்படாத பல நிறுவனங்கள் மக்களை ஏமாற்றுதல் ஒன்லைனில் விளம்பரங்கள் மூலம் வருமானம் தருவதாக கூறி முதலீடு மேற்கொள்ளுமாறு ஏமாற்றுதல் அல்லது ஆன்லைன் வருமானம் எனக்கூறி ஏமாற்றுதல் ஒரு வியாபாரத்தில் புதியவர்களை இனைத்து (பிரமிட் முறை) இத்திட்டம் மூலம் பலரை இனைக்க கூறுவர் அவர்களை இணைத்து வருமானம் பெற வேண்டும். ஆனால் நிறுவனங்கள் இடையில் நிறுத்தப்படும் இதனால் ஏமாறுதல் அரசு அதிகாரிகள் என கூறி சிலர் மோசடி செய்தல் போன்ற பல வகையான மோசடிகள் அதிகரித்துள்ள இக்கால நிலையில் பேராசையாலும், அதீத அன்பினாலும் மோசடிக்காரர்கள் இடம் இருந்து ஏமாறாமல் குறித்த தகவல்கள் உண்மையானவையா என பரிசீலித்து ஏமாற்றத்தை தவிர்க்குமாறும் பொது மக்களுக்கு பிரதேச செயலக உத்தியோஸ்தர்கள் மூலமாக அறிவுறுத்தல்கள் மத்திய உத்தியோஸ்தர்களால் எத்திவைக்கப்பட்டது.