மட்டக்களப்பில் பொங்கல் பொருட்கள் வழங்கிய சுவீஸ் நாட்டின் மேல்மருவத்தூர் அருள் மிகு ஆதிபராசக்தி சித்தர் பீடம்

க.ருத்திரன்.
சுவீஸ் நாட்டின் மேல்மருவத்தூர் அருள் மிகு ஆதிபராசக்தி சித்தர் பீடம் வார வழிபாட்டு மன்றத்தினால் தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் தினத்தினை முன்னிட்டு பொங்கல் பொருட்கள் வழங்கி வைக்க்பட்டன.
 மட்டக்களப்பு மேல் மருவத்தூர் அறப்பணி மன்றத் தலைவர் பா.வினோராஜ் தலைமையில் வந்தாறுமூலை ஸ்ரீ மகா பெரிய தம்பிரான் ஆலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட தெரிவு செய்யப்பட்ட மக்களுக்கான  இவ் மனித நேய உதவி வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில்  கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் பொங்கல் இட்டு ஆலய பூசை நிகழ்வுகளுடன் மாணவர்களின் நடனம் ,அதிதிகளின் விசேட உரை இடம்பெற்றதுடன் சக்தி தொண்டர்களுக்கு புதுவருட புத்தாடைகளும் வழங்கி வைக்கப்பட்டது.நிகழ்வில் சமாதான நீதவானும் ஓய்வு பெற்ற அதிபருமான க.சண்முகம்,மற்றும் ஆசிரியர்களும் கலந்து கொண்டு பொங்கல் பொருட்களை வழங்கி வைத்தனர்.