அக்கரைப்பற்று கருங்கொடித்தீவுறை பெரியபிள்ளையார் ஆலயத்தில் பிள்ளையார் பெருங்கதை மகா விரதம் சிறப்பான முறையில் அனுஸ்டிப்பு

(செல்வி வினாயகமூர்த்தி)

ஒவ்வொரு ஆண்டும்.கார்த்திகை மாதத்து கிருஷ்ணபட்சப் பிரதமையில் தொடங்கி, மார்கழி மாதத்து சுக்ல பட்ச சஷ்டி வரையிலான 21 நாட்கள் அனுஷ்டிக்கப்படும் விரதம் ‘விநாயகர் சஷ்டி விரதமாகும். விநாயகர் சதுர்த்தியை அடுத்து, விநாயகப்பெருமானை வழிபடக்கூடிய சிறப்பு மிக்க விரதங்களில் பிள்ளையார் பெருங்கதை விரதமும் ஒன்றாகும்.

20.11.2021 ஆரம்பமாகிய இவ்விரதமானது 09.12.2021 ல் நிறைவு பெற்றது. அந்த வகையில் அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று கருங்கொடித்தீவுறை பெரியபிள்ளையார் ஆலயத்திலும் இம்முறை பிள்ளையார் பெருங்கதை மகாவிரதம் சிறப்பான முறையில் அனுஷ்டிக்கப்பட்டிருந்தது.

ஆலய பிரதம குரு வசந்தன் குருக்கள் தலைமையில் மஹா கணபதி ஹோமம்,மற்றும் பெரும் சஷ்டி அபிஷேகமும் இடம்பெ ற்றிருந்ததுடன் வரலாற்றில் முதல் முறையாக இவ் ஆலயத்தில் கஜமுகசூர சங்ஹாரம் சிறப்பான முறையில் இடம்பெற்றிருந்தமையும் இவ்வருட பிள்ளையார் பெருங்கதை விரதத்தின் சிறப்பம்சமாகும்.