திருகோணமலை நகராட்சி மன்றத்தின் தொழிலாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு

(அ.அச்சுதன் )

கொவிட் -19 தொற்று உக்கிரமாக இருந்த காலப்பகுதியில் பணியாற்றி ஓய்வு பெற்று சென்ற திருகோணமலை நகராட்சி மன்றத்தின் சுகாதார தொழிலாளர்கள் 05 பேருக்கான கௌரவிப்பு நிகழ்வு நேற்று 10ம் திகதி காலை நகராட்சி மன்ற சுகாதார பகுதியில் இடம் பெற்றது.

இதன் போது நகராட்சி மன்ற உறுப்பினர் வடமலை ராஜ்குமார் அதிதியாக கலந்து கொண்டிருந்தார்.தொழிலாளர்கள் நலன் சார்ந்த விடயங்களில் அதிக அக்கரையுடன் செயற்படும் உறுப்பினர் என்ற அடிப்படையில் கௌரவ உறுப்பினர் வடமலை ராஜ்குமார் பொன்னாடை அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

கிழக்கு மாகாண உள்ளுராட்சி மன்ற தொழிலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் எஸ்.சுந்தரமூர்த்தி, செயலாளர் வெ.கிருஸ்ணமூர்த்தி, பொருளாளர் ச. விஜியவிஸ்வம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

அதன் போது உரையாற்றிய கௌரவ உறுப்பினர் வடமலை ராஜ்குமார் கொவிட் தொற்று காலப்பகுதியில் அணைவரும் பயந்து வீடுகளில் இருந்த போது துனிந்து திருகோணமலை நகரத்தினை சுகாதாரமாக வைத்திருந்து நோய்த்தொற்றிலிருந்து நகரம் விடுபட சுகாதார துறையுடன் இணைந்து பாடுபட்டவர்கள் சுகாதார தொழிலாளர்கள். இதை எமது நகர மக்கள் என்றும் மறக்க மாட்டார்கள்.

தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு அங்கிகளை தற்போதய சபையால் மிக நேர்த்தியாக வழங்கப்படுகின்றது.எனவே தொழிலாளர்கள் உங்களுடை பாதுகாப்பை உறுதிப்டுத்திக் கொண்டு தங்களது கடமைமை மேற்கொள்ளவேண்டும்.

மேலும் உங்களுடைய உரிமை சார்ந்த விடயத்தில் ஏதேனும் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்தால் அதனை உடனடியாக தெரியப்டுத்தவும் அவற்றறை தீர்ப்பதற்காகவே கௌரவ தலைவர் அவர்களும் 24 உறுப்பினர்களும் உங்களால் தெரிவு செய்யபட்டள்ளோம் என தனது உரையில் திருகோணமலை நகராட்சி மன்றத்தின் உறுப்பினர் வடமலை ராஜ்குமார் தெரிவித்தார்.