(அ.அச்சுதன்)
அகில இலங்கை உள்ளூராட்சி நிறுவனங்கள் நடுக்காட்டு உத்தியோகத்தர் சங்கம் வருடாந்த ஒன்றுகூடல் மற்றும் புதிய நிர்வாகத் தெரிவு ஞாயிற்றுக்கிழமை (09) இதன் செயலாளர் கே.டி.ஹறல்ட் வின்சென்ட் தலைமையில் திருக்கோணமலை நகராட்சி மன்ற நகர மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது பலதரப்பட்ட குறை நிறைகள் இங்கு பேசப்பட்டது.
இந்நிகழ்வில் நாடளாவிய ரீதியில் உள்ளுராட்சி மன்றங்களில் கடமையாற்றும் நடுக்கட்டு உத்தியோகத்தர்கள் உரிய முறையில் அங்கீகாரம் மற்றும் கௌரவம் கிடைப்பதில்லை என்றும், தாங்கள் உள்ளூராட்சி மன்றங்களின் வருமானத்தில் 20 வீத பங்களிப்பினை செய்கின்ற போதும் தாங்கள் ஏனைய உத்தியோகத்தர்கள் கிடைகின்ற கௌரவம் கூட கிடைப்பதில்லை என்று இதன் செயலாளர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து உத்தியோகத்தர்களுக் இடையிலான கருத்து பரிமாற்றம் நடைபெற்றது. அதன்போது அங்கு கருத்து தெரிவிக்கையில் தங்களுக்கு சரியான கதிரைகள், மேசைகள் கூட கிடைப்பதில்லை மற்றும் கொடுப்பனவு தாமதம் ஏற்படுகின்றது என்றும் தாங்கள் ஒரு முகவர்கள் போன்று நடத்தப்படுகிறார்கள் என்றும் கவலை தெரிவித்தனர்.
இப்படியான விடயங்களை சபைகளின் தலைவர்கள், செயலாளர்கள் மற்றம் உள்ளுராட்சி ஆணையாளர்கள் கவனத்தில் எடுக்கவேண்டும் எடுத்து எங்களுக்கு உரிய அங்கீகாரத்தை தருவதற்கு ஆவண செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.
அதனை தொடர்ந்து விடய இராஜாங்க அமைச்சரை எதிர்வரும் காலத்தில் சந்திப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு இருப்பதாகவும் அதன் போது அவர்கள் தங்களுடைய குறைகளை அவரிடம் தெரிவித்து நிரந்தர நியமனத்தை பெறுவதற்கு தாங்கள் எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து புதிய நிர்வாகசபை தெரிவு இடம்பெற்றது அதனடிப்படையில் தலைவராக
நீல் உதய சார்ந்த (கோட்டை மாநகர சபை), செயலாளராக கே.டி. ஹறல்ட் வின்சென்ட் (நீர்கொழும்பு மாநகர சபை), பொருளாளராக எம் பீ.ஏ.கே. பீயாள் (நீர்கொழும்பு மாநகர சபை), ஒருங்கிணைப்பாளராக எம்எம்.குறே (ஹம்பகமாநகர சபை)
உப தலைவராக எம் புஸ்பராஜா (வவுனியா நகரசபை),உப செயலாளராக எம்.எஸ்.பி பிரேமசந்திர (ஜால பிரதேசசபை) ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.
இந்நிகழ்வில் நாடளாவிய ரீதியில் உள்ளுராட்சி மன்றங்களில் கடமையாற்றும் நடுக்கட்டு உத்தியோகத்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.