திருகோணமலை கிறீன் வீதியின் அவல நிலை

(ஆர். சமிரா )

திருகோணமலை கிறீன் வீதி பகுதியில் சில குடியிருப்பாளர்களின் கட்டுமானப்பணிக்காக மணல் கொண்டு சென்ற வேளையில் வீதியின் ஒரு பகுதி உடைந்து விட்டது, இச்சம்பவம் இடம் பெற்று இருபது நாட்கள் கடந்து விட்ட நிலையிலும் இது வரை சம்பந்தப்பட்ட அரச உயர் அதிகாரிகள் புனர்ரமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கவில்லையென அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இதனால் கழிவு நீர் குறிப்பிட்ட சில வீடுகளுக்குள் செல்வதற்கு சந்தர்ப்பம் காணப்படுகின்றது.

இது போன்று இவ் வீதியில் மூன்று இடங்கள் உடைந்து காணப்படுகின்றது.
இவ் வீதி திருகோணமலை நகரின் முக்கிய பிரதான வீதியாக காணப்படுகின்றது, இதனால் வீதி விபத்துக்கள் கூட இடம் பெற சந்தர்ப்பங்கள் இருக்கின்றன, எனவே சம்பந்தப்பட்ட அரச உயர் அதிகாரிகள் உடன் கவனம் எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.