சமுதாய வளர்ச்சியில் ஊடகத்தின் பங்கு அளப்பரியது; சுவிஸ் சமூக செயற்பாட்டாளர் துரைநாயகம் 

(வி.ரி.சகாதேவராஜா)

ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் ஊடகம் இன்று உலகத்தின் தலைவிதியை நிர்ணயிக்கிறது. அதுபோல ஒரு சமுதாய வளர்ச்சியில் ஊடகத்தின் பங்கு அளப்பரியது.எனவே ஊடகவியலாளர்களை பெரிதும் மதிக்கின்றேன்.

இவ்வாறு சுவிஸ் உதயத்தின் தாய்ச்சங்கத்தின் பொருளாளரும், பிரபல சமூகசேவகரும், தொழிலதிபருமான க.துரைநாயகம் தெரிவித்தார்.

வெற்றிரெப் இணையத்தளத்தின் ஊடகவியலாளர்களுக்கு இலட்சினை பொறிக்கப்பட்ட ரீசேட்டுக்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு, சனிக்கிழமை(8) இணையத்தளத்தின் பணிப்பாளர் ஊடகவியலாளரும், ஆசிரியருமான சா. நடனசபேசன் தலைமையில் இடம் பெற்றது.

வெற்றிரெப் இணையத்தள ஊடகவியலாளர்களுக்காக ஊடகவியலாளர் சா. நடனசபேசன் ,எருவில் கல்வி சமூக ஒன்றியத்தின் ஸ்தாபகத் தலைவர் அ.வசிகரனிடம் வேண்டிக்கொண்டதற்கு இணங்க இவ் உதவி வழங்கி வைக்கப்பட்டது.

நிகழ்வில் க.துரைநாயகம் மேலும் தெரிவிக்கையில்.

கிழக்கில் முன்னணி இணையத்தளமான வெற்றிரெப் இன்று இற்றைப்படுத்தலில் முதல்வனாகத்திகழ்கிறது. தரமான நம்பகமான செய்திகளை முந்திக்கொண்டு தருவதில் வெற்றிரெப்புக்கு நிகர் அதுவே. அதனை வழிநடாத்தும் சபேசன் ஆசிரியர் பாராட்டுக்குரியவர்.

தொடர்ச்சியாக எழுதும் ஊடகவியலாளர்களுக்கு என்னாலான உதவிகளைச்செய்யவிருக்கிறேன்.என்றார்.

இந்நிகழ்வில் சுவிஸ் உதயத்தின் தாய்ச்சங்கத்தின் பொருளாளர் சமூகசேவகர் தொழிலதிபர் க.துரைநாயகம், எருவில் கல்வி சமூகப் பொருளாதார ஒன்றியத்தின் ஸ்தாபகத் தலைவர் அ.வசிகரன் ,சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்குமாகாணக் கிளையின் தலைவரும் பிரதிக்கல்விப் பணிப்பாளருமான .மு.விமலநாதன் ,சிரேஷ்ட ஊடகவியலாளரும் உதவிக்கல்விப் பணிப்பாளருமான வி.ரி.சகாதேவராஜா, சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்குமாகாணக்கிளையின் பொருளாளர் பாவாணர் அக்கரைப்பாக்கியன் ,கிழக்குமாகாண ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் எ.தேவஅதிரன் ,எருவில் கல்வி சமூகப் பொருளாதார ஒன்றியத்தின் எருவில் கல்வி சமூகப் பொருளாதார ஒன்றியத்தின் செயலாளர் ஆசிரியர் இ.ஜீவராஜ் உட்பட ஊடகவியலாளர்கள் கலந்து சிறப்பித்தனர்.

வெற்றிரெப் இணையத்தளத்திற்கு உதவிகளைச் செய்த சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்கத்தின் பொருளாளர் க.துரைநாயகம் ,எருவில் கல்வி சமூக ஒன்றியத்தின் ஸ்தாபகத் தலைவர் அ.வசிகரன் ,சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்கத்தின் செயலாளர் அம்பலவானர் ராஜன் ,சிரேஷ்ட ஊடகவியலாளர் வி.ரி.சகாதேவராஜா ,இளம் ஊடகவியலாளருக்கான விருதுபெற்ற றமீஸ் ஆகியோர் பொன்னாடை போர்த்தி பாராட்டிக் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.