வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலையிடு; போராட்டம் கைவிடல்

(க.ருத்திரன்)

மட்டக்களப்பு கோறளைப்பற்று பிரதேச சபை சுகாதார ஊழியர்கள் கடந்த 5 நாட்களாக மேற்கொண்டு வந்த வேலைப் பணிபஸ்கரிப்பு கவனயீர்ப்பு போராட்டம் வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலையிட்டு வாக்குறி அளித்ததால் நேற்று கைவிடப்பட்டது.

அரச ஊழியர் தாக்கப்பட்டதற்கு பொலிசார் நடவடிக்கை எடுப்பதுடன் சபை ஊழியர்கள் மூவரது கைது விடயத்தினை பரிசீலனை செய்து பொது மக்களின் சாட்சியங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாக நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டு ஊழியர் திண்மக்கழிவகற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

கடந்த 6 ஆம் திகதி திணைக்களத் தலைவரின் பணிப்புரைக்கமைய வாழைச்சேனை பெற்றோல் நிலையத்திற்கு அருகில் உள்ள அரச காணியினுள் சட்டவிரோதமாக கொட்டில் அமைக்கும நடவடிக்கையினை தடுக்கச் சென்ற ஊழியர்களுக்கு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. தாக்குதல் மேற்கொண்டவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டத்pல் சபை ஊழியர்கள் ஈடுபட்டனர்.