புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

(எஸ்.சதீஸ்)

மட்டக்களப்பு Blooming Buds (வுளுமிங் பட்ஸ்) முன்பள்ளி நிலையத்தில் இவ்வருடம் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு திங்கட்கிழமை (10.01.2022ம் திகதி) காலை இடம்பெற்றது.

இந்நிகழ்வு கொவிட் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி இடம் பெற்றது.

Blooming Buds ” முன்பள்ளி நிலையத்தின் அதிபர் திருமதி சி.தேவநம்பி தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வானது இறைவணக்கத்துடன் ஆரம்பமானது. இதன் போது கடந்த வருடம் கல்விகற்ற பழைய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களால் இவ்வருட புதிய மாணவர்களை மாலை அணிவித்து, மலர் வழங்கி வரவேற்கும் நிகழ்வுகள் இடம்பெற்றது.

இதன்போது மாணவர்களின் நடனம் உள்ளிட்ட கலை நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் முன்பள்ளி அதிபரால் மாணவர்கள் பற்றி கருத்துரையும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.