காரைதீவில் பல்நோக்கு கூட்டுறவு சங்க பல்பொருள் விற்பனை நிலையம் திறப்பு !

(நூருள் ஹுதா உமர்)

காரைதீவு பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தின் பல்நோக்கு கூட்டுறவு சங்க கட்டிடத்தில் புதிய பல்பொருள் விற்பனை நிலையமொன்று காரைதீவு பல்நோக்கு கூட்டுறவு சங்க நிர்வாகத்தலைவர் யோ. கோபிகாந்தின்  தலைமையில் இன்று (10)  திறந்து வைக்கப்பட்டது

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கூட்டுறவு ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி பிரதம விருந்தினராக கலந்து கொண்டு பல்நோக்கு கூட்டுறவு சங்க கட்டிடத்தை திறந்து வைத்தார். மேலும் இந் நிகழ்வில் காரைதீவு பிரதேச செயலாளர் எஸ். ஜெகராஜன், கல்முனை கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே.வி. தங்கவேல் ஆகியோர்  கௌரவ அதிதிகளாக கலந்து கொண்டனர்.

மேலும் கூட்டுறவு அபிவிருத்தி திணைக்கள பிராந்திய அதிகாரிகள், அம்பாறை மாவட்ட ஏனைய கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள், பல்நோக்கு கூட்டுறவு சங்க இயக்குனர் சபை உறுப்பினர்கள், பிரதேச செயலக அதிகாரிகள், ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.