மட்டு.மாவட்டத்தில் கடும் மழை; காத்தான்குடியில் பாரிய மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

(ரீ.எல்.ஜவ்பர்கான்)

மட்டு.மாவட்டத்தில் நேற்று மாலை முதல் கடும் மழை பெய்து வருகின்றது. கடும் மழை மற்றும் காற்று காரணமாக காத்தான்குடி தள வைத்தியசாலைக்கு முன்பாக மரம் ஒன்று முறிந்து வீதியில் விழுந்ததால் சற்று நேரம் கடற்கரை வீதி போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

அவ்விடத்துக்கு உடனடியாக விரைந்த நகரசபை தவிசாளர் தமது நகரசபை ஊழியர்களின் உதவியுடன் மரத்தை வெட்டி வீதிப் போக்கு வரத்தை சீர்செய்துள்ளார்